இந்தியாவில் கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஜார்க்கண்டில் இன்று முதல் ஒரு வார பொதுமுடக்கம் தொடங்கியுள்ளது.
மாநிலத்தில் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஸ்வஸ்த்ய சூரக்ஷா சபதம் அதாவது சுகாதார பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்கக் கோரி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாயன்று அறிவித்தார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் ஏப்.29 வரை ஒரு வார பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருள்கள், வேளாண்மை, கட்டுமானம், சுரங்க மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.
மாநில அரசின் உத்தரவுப்படி, அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒன்றுகூடாமல் வழிபாட்டுத் தலங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,041 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் 62 பேர் இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


