/

கரோனா பரவல்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நிறுத்தம்

கரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது. 

News image

அமர்நாத் யாத்ரீகர்கள் (கோப்புப் படம்).

Updated On :22 ஏப்ரல் 2021, 11:42 am

கரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது. 

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை மேம்பட்டதும் மீண்டும் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. 56 நாள்களுக்கு நடைபெறும் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 22 (ரக்ஷா பந்தன்) வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.