2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்

கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்
Updated On :27 ஜனவரி 2024, 7:59 pm

IANS


திருவனந்தபுரம்: கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளத்தில் இடுக்கி, திரிசூர், மலப்புரம், பாலக்காடு, கோக்கோடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் ஒரு சில பகுதிகளில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. மழை பெய்யும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு பகுதிக்கு இன்றும், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு பகுதிகளுக்கு நாளையும் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.