புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பினராயி விஜயன், உம்மன் சாண்டியின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

பினராயி விஜயன், உம்மன் சாண்டியின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

Updated On :9 ஏப்ரல் 2021, 6:39 am

கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

கரோனா பாதிக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கிய உடல்நல சிக்கல்கள் இல்லை என்றாலும் ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகின்றது. 

இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி மாநில தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், செய்தித்தாள்களைப் படிப்பதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 3ஆம் தேதி பினராயி விஜயன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால் உம்மன் சாண்டி இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. 

தற்போது முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.