புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உ.பி.யில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 10:31 am

உத்தரப் பிரதேச மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் பக்ஷிவாலா பகுதியில் யூசுப் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவர் வீட்டில் பட்டாசு பிரிவு ஒன்றை நடத்தி வந்தார்.

மிகவும் சக்திவாய்ந்த வெடிவிபத்து என்பதால், வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

வீட்டில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்களே விபத்துக்குக் காரணமாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை நடத்திவந்த யூசுப்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.