தெலங்கானாவில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா மீட்பு விகிதம் 84 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணிநேரத்தில் 2,243 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,60,933 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்தின் மீட்பு விகிதம் தேசிய சராசரியான 83.27 சதவீதத்திலிருந்து 84.08 சதவீதமாக உயர்ந்தது.
மேலும் ஒரே நாளில் 11 பேர் கரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இறப்பு விகிதம் தேசிய சராசரியான 1.57 சதவீதத்திலிருந்து 0.58 சதவீதமாக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் 1,91,386 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 29,326 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் வீடு மற்றும் நிறுவனங்களில் தனிமைப்படுத்துதலில் 23,880 பேர் அடங்குவர்.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் மற்றும் 1,076 விரைவான ஆன்டிஜென் சோதனை மையங்களில் 55,359 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் அரசு இதுவரை 29,96,001 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


