புது தில்லி: கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் விவரங்களை, அந்நிறுவனம் மூன்றாம் நபர்களுக்கு பகிர்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு கூகுள் இன்று விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் பே நிறுவனம், மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உள்பட்டு செயல்படவில்லை, பணப்பரிமாற்றத்தில் ஈடுபட ரிவர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை, தனது பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு பகிர்வதாகக் கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தப் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், பயனாளர்களின் தகவல்களை என்பிசிஐ மற்றும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் (பிஎஸ்பி) வங்கிகளின் முன் அனுமதியுடனே, பயனாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்புக்கு பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பிசிஐ வெளியிட்டிருக்கும் 'யுபிஐ'வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே கூகுள் பே பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. அதேவேளையில், சட்டத்தைப் பின்பற்றியே செயல்படுகிறது. பயனாளர்களின் பணப்பரிமாற்ற விவரங்களை மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


