கொல்கத்தா: கனமழை காரணமாக ஏற்பட்ட பல நிலச்சரிவு சம்பவங்களால், சிக்கிம் மாநிலத்தை மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
சிக்கிம் - மேற்கு வங்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 10 - சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் காங்டோக் முதல் கலிம்போங் மாவட்டம் மற்றும் சிலிகுரி நகரங்களை இணைக்கிறது. அதுபோல மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், சிக்கிமின் சில பகுதியில் அடுத்த சில நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களிலும் திங்கள்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலைப் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிம்போங் - தோர்ஸ் பகுதியில் முற்றிலும் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை 10, 31 ஆகியவை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும், சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


