டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தலிபான் தாக்குதலில் 9 ஆப்கன் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின், தக்கார் மாகாணத்தில் தலிபான் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

News image

9 Afghan security personnel dead in Taliban ambush

Updated On :21 செப்டம்பர் 2020, 8:12 am

ஆப்கானிஸ்தானின், தக்கார் மாகாணத்தில் தலிபான் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

நவாபாத் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்து 3 காவல் அதிகாரிகள் உள்பட 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். 

மேலும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டாரின் தலைநகரான தோஹாவில் ஆப்கானிய அரசாங்கம் மற்றும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் இத்தகைய தாக்குதலை தலிபான்கள் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.