/

அருணாசலில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியது

அருணாசலில் புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image
Corona damage in Arunachal Pradesh exceeds 6,000
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

UNI

அருணாசலில் புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசல பிரதேசத்தில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், நிறைய பேருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் தொற்று பரவியுள்ளது. இதுவரை 10 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

நேற்று ஒரேநாளில் கரோனா பாதித்த 123 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். தற்போது 1,732 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.