கரோனாவுக்கு 4 வயது சிறுவன் பலி: ஜம்மு மருத்துவமனை முற்றுகை
ஜம்முவில் நான்கு வயது சிறுவன் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஜம்முவில் நான்கு வயது சிறுவன் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில்,
ஜம்மு அரசு மருத்துவமனையில், நான்கு வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தான்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் சனிக்கிழமை காலை உயிரிழந்தான். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிந்ததாக குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாள்களாக சிசியு பிரிவு மற்றும் கரோனா தனிமைப்படுத்தும் பிரிவில் ஆக்ஸிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால், அது சரிசெய்யப்படும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...