நிலச்சரிவு: ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மீண்டும் மூடல்
ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை பிற்பகல் மீண்டும் மூடப்பட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை பிற்பகல் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது..
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது. இதன் காரணமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நெடுஞ்சாலையில் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை ஒரு வழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று பிற்பகல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலின் பேரின் நிலச்சரிவினால் சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் வரையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது .
மேலும், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் மத்திய காஷ்மீரில் உள்ள சோனாமார்க்கில் இருந்து ஸ்ரீ நகர் நெடுஞ்சாலையில் உள்ள சோஜிலா பாஸின் மறுபுறம் செல்ல அனுமதிக்கப்படுகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...