77 சாலை விதிமீறல்களுக்கு ரூ.42,500 அபராதம் விதித்து, இரண்டு மீட்டர் நீள ரசீதை போக்குவரத்துக் காவலர் கொடுத்ததும், வாகனத்தை போக்குவரத்துக் காவலரிடமே விட்டுவிட்டு, இளைஞர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண் குமார், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது இப்படி தான் ஒரு தலைப்புச் செய்தியாக மாறுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை வாங்கிப் பயன்படுத்துவோருக்கு இது சற்றுக் கலக்கத்தையும் ஏற்படுத்தலாம்.
சரி நேராக செய்திக்கு வருவோம், அருண் குமார் ஓட்டி வந்த வாகனத்தின் எண் பலகையில் முறைகேடு மற்றும் வாகன ஓட்டி தலைக்கவசம் அணியாமல் வந்தது என இரண்டு சாலை விதிமீறல்களுடன் சேர்த்து பழைய சாலை விதிமீறல்களுக்கான அபராதத்தையும் போக்குவரத்துக் காவலர்கள் கூட்டினர்.
இதையும் படிக்கலாமே.. வரலாற்றின் பக்கங்களிலிருந்து: இந்திரா காந்தி கொல்லப்பட்டார்: காவலாளர்களே சுட்டனர்
மிகச் சரியாக அருண் குமார் ஓட்டி வந்த வாகனத்தின் எண்ணில், 77 சாலை விதிமீறல்களும், அதற்கான அபராதத் தொகையாக ரூ.42,500ம் வந்தது. இதில், சாலை சந்திப்புகளில் நிற்காமல் சென்றது உள்ளிட்டவையும் அடங்கும். இரண்டு மீட்டர் நீளம் கொண்ட அபராத ரசீதை அருண் குமாரின் கையில் கொடுத்ததும், அவருக்கு லேசாக ரத்தக் கொதிப்பு கூடி குறைந்திருக்கலாம்.
ஆனால், அருண் குமாருக்கு அப்போது வேறு வழியே தெரிந்திருக்கவில்லை. போக்குவரத்துக் காவலரிடம் வண்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு, இந்த வாகனமே ரூ.30 ஆயிரத்துக்குத்தான் விலைபோகும். இதற்கு ரூ.42,500 அபராதம் செலுத்த முடியுமா? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
போக்குவரத்துக் காவலர் ஷிவராஜ்குமார் அங்காடி, வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளார். அபராதத்தை செலுத்துமாறு அருண் குமாருக்கு நோட்டீஸ் அனுப்புவோம். ஒரு வேளை அவர் பதிலளிக்கவில்லை என்றால், இந்த வாகனத்தை ஏலத்துக்கு விட்டுவிடுவோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


