டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஹிமாசல முதல்வருக்கு கரோனா பாதிப்பு

ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
Himachal CM tests positive for COVID-19.
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

UNI

ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்ததாவது, 

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டதால், ஒரு வாரக் காலமாக எனது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். 

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், கரோனா பரிசோதனை செய்தேன். அதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளேன். தொற்றிலிருந்து விரைவில் மீள்வேன் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.