பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜார்க்கண்டில் கரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளே மரணமடைந்த அமைச்சர்

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி, கரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஜார்க்கண்டில் கரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளே மரணமடைந்த அமைச்சர்

Updated On :3 அக்டோபர் 2020, 12:27 pm


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி, கரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையின் பலனாக, அவருக்கு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று குணமடைந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அன்சாரி இன்று மரணமடைந்தார். அவர் ஏற்கனவே இதயம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

73 வயதாகும் அன்சாரி, நான்கு முறை மதுப்பூர் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவரது மரணத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.