புது தில்லி: மிகவும் பதற்றமானவர் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது பற்றி கருத்துக் கூற காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது.
மேலும், ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளைக் கொண்ட புத்தகம் பற்றி, பின்னால் இருந்து இயக்கப்படும் ஊடகத்தில் வெளியான செய்திகள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சில காங்கிரஸ் தலைவர்கள் பராக் ஒபாமாவின் கருத்தை எதிர்த்திருக்கிறார்கள். "ஒபாமா அவர்களே, யார் ஒருவராலும் வெறும் 5 முதல் 10 நிமிடத்தில் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் பல ஆண்டுகள் கூட ஆகலாம். ராகுல் காந்தியைப் பற்றி நீங்கள் மதிப்பிட்டது தவறு" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் கூறியுள்ளார்.
பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது நினைவுக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


