தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்: புதிய பெயர்ப் பலகை திறப்பு

புதிதாக பெயர் மாற்றப்பட்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் புதிய பெயர்ப் பலகையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

DIN

புதிதாக பெயர் மாற்றப்பட்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் புதிய பெயர்ப் பலகையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் என்று பிரதமர் நரேந்திரமோடி மாற்றினார். கடந்த 8-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ரோ-பாக்ஸ் படகு சேவையின் தொடக்க விழாவின் போது இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமரின் அறிவிப்பை அடுத்து சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் இந்த அறிவிக்கை கடந்த 10-ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து துறையின் அனைத்து அலுவலகங்களிலும் பெயர் மாற்றம் அமலுக்கு வந்தது. இரண்டு வேலை நாள்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டன.  

இந்த நிலையில் புதிதாக எழுதப்பட்ட அமைச்சகத்தின், உலோகத்தால் ஆன பெயர் பலகையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.