ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

News image

கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை

Updated On :2 நவம்பர் 2020, 12:22 pm


குவகாத்தி: அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் ரௌஷன் இது பற்றி கூறுகையில், கடை உரிமையாளர் நிர்மல் பால், அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நிர்மல் பால், வங்கியிலிருந்து பெற்ற ரூ.25 - 30 லட்சம் கடனுக்கு உரிய தவணையை செலுத்த முடியாமல், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால், குடும்பத்தினர் இந்த துயர முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலின் மூத்த மகள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.