போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் தொகுதி எம்.பியான பிரக்யா சிங் தாக்குர் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர். சர்ச்சையாக ஏதாவது கூறி வம்புகளில் சிக்கிக் கொளவது அவரது வழக்கம்.
இந்நிலையில் பிரக்யா சிங் தாக்குர் எங்கே? என்று கேள்வி எழுப்பி போபால் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நகரின் புதிய சந்தைப் பகுதி மற்றும் முதலாவது மற்றும் இரண்டாவது இணைப்பு சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில் பிரக்யா சிங் படத்துடன், ‘கரோனா வைரஸ் தொற்றால் போபால் நகரம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எம்.பி பிரக்யா சிங் தாக்குர் எங்கே?” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் யாரென்று தெரியவில்லை.
முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் எம்.பி, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் குறித்தும் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் அதில் அதனை அச்சடிக்கச் செய்தோரின் பெயர் மற்றும் எண் இடம்பெற்றிருந்ததால், தொடர்புடையோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


