மும்பை: மும்பையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து படுக்கை வசதிகளும் நிரம்பிவிட்டதாக மும்பை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 27ம் தேதி நிலவரப்படி, மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 645 படுக்கை வசதிகளில் 99% படுக்கைகள் நிரம்பிவிட்டன, ஆக்ஸிஜன் வசதியுடனான படுக்கை வசதிகளில் 4,292ல் 65% படுக்கைகள் நிரம்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நல்ல நிலையில் இருக்கும் 373 வென்டிலேட்டர்களில் 72 சதவீதம் வென்டிலேட்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 35,273 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 38 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


