புது தில்லி: உலக நாடுகள் பலவற்றையும் பெரிய அளவில் பாதித்திருக்கும் கரோனா தீநுண்மி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே கூறலாம்.
இந்தியாவில் இன்று கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தில் உள்ளது.
ஆனால், மற்ற நாடுகளை விட, இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, 100 நோயாளிகளில் இருந்து இன்று ஒரு லட்சம் நோயாளிகளை எட்ட சரியாக 64 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் இதுவே அமெரிக்காவில் 100இல் இருந்து வெறும் 25 நாள்களில் ஒரு லட்சம் நோயாளிகளை எட்டியுள்ளது.

இத்தாலியில் கரோனா தொற்று ஏற்பட்டு 36 நாள்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுள்ளது. ஸ்பெயினில் 30 நாள்களிலேயே கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.
இவ்வாறு வளர்ந்த நாடுகளில் கூட கரோனா தொற்று அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கும் நிலையில், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியாவில் ஊரடங்கு நடவடிக்கையால் கரோனா பரவல் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஒரு லட்சத்தைத் தொட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. மே 12ம் தேதி கணக்கீட்டின்படி, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களில் மரண விகிதம் 3.2% ஆக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


