பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் 24 மணி நேரத்தில் 20 பேர் பலி; கரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்குகிறது

புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 20 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :13 மே 2020, 5:29 am


புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 20 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், நேற்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் புது தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் தில்லியில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 359 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 7,998 ஆக உள்ளது.

நேற்று 346 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2858 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.