பெங்களூரு: பெங்களூரு அருகே மகடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில், உறங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தூக்கிச் சென்ற சிறுத்தை, அவனைக் கடித்துத் தின்றது. குழந்தையைக் காணமல் தேடிய பெற்றோர், பாதி உடலை கண்டெடுத்துள்ளனர்.
கடாரயானபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இது பற்றி கூறுகையில், கடும் வெயில் தகிப்பதால் இரவில் காற்று வராததால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் வீட்டின் கதவை திறந்து வைத்தே உறங்குவது வழக்கம்.
அதுபோல நேற்று நள்ளிரவு சிறுவனின் பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, சிறுவனை தூக்கிச் சென்றுள்ளது.
திடீரென பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணாத பெற்றோர், அக்கம் பக்கத்தில் குழந்தையைத் தேடினர். இந்த நிலையில்தான் வீட்டில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்தில் சிறுத்தை பாதி கடித்துத் தின்ற நிலையில், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் - மனிதர்கள் இடையே மோதல் நடப்பது வழக்கமான சம்பவமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


