புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கரோனாவைக் கட்டுப்படுத்த ஹைதராபாத்துக்கு சீல்: சந்திரசேகர் ராவ் உத்தரவு

ஹைதராபாத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியே எங்கும் செல்ல முடியாது, வெளியில் இருக்கும் யார் ஒருவரும் ஹைதராபாத் நகருக்குள் நுழையக் கூடாது, இதேபோல ரங்காரெட்டி, மெட்சல்-மல்காஜ்கிரி மற்றும் விகாராபாத் மாவட்டங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2020, 9:37 am


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியே எங்கும் செல்ல முடியாது, வெளியில் இருக்கும் யார் ஒருவரும் ஹைதராபாத் நகருக்குள் நுழையக் கூடாது, இதேபோல ரங்காரெட்டி, மெட்சல்-மல்காஜ்கிரி மற்றும் விகாராபாத் மாவட்டங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் இந்த நான்கு மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. தெலங்கானாவில் நடைபெற்ற  உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சந்திரசேகர் ராவ் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதில், ஹைதராபாத் எல்லைகளை மூடி சீல் வையுங்கள். நகரின் எல்லைகளை பாதுகாக்க காவலர்களை நியமியுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஹைதராபாத் நகர் முழுவதும் பூட்டி சீல் வையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

அதே சமயம், ஆந்திர மாநிலம் கர்னூல் மற்றும் குண்டூர் மாவட்ட மக்கள் தெலங்கானாவுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுமாறும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானவில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது அனைத்தும் இந்த  4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சந்திரசேகர் ராவ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.