குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 45 வயது கேபிள் ஆபரேட்டர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார். அவருக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பதை காவல்துறை கடும் முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்று குண்டூர் திரும்பிய 54 வயது நபர் மூலமாக கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா பாதித்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கேபிள் ஆபரேட்டருக்கு ஏற்கனவே காசநோய் இருந்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி அவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஏப்ரல் 10ம் தேதி அவர் மரணம் அடைந்தார். அவர் மூலமாக நரசரோபேட் பகுதியில் நிறைய பேருக்கு கரோனா தொற்று பாதித்தது.
இந்த கேபிள் டிவி ஆபரேட்டருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் சென்றுள்ளார். வழியில், பேருந்து நிலையத்தில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். அதே சமயம், கேபிள் ஆபரேட்டரும் அதே தேநீர் கடைக்கு வந்து தேநீர் குடித்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் அந்த கடையில் நின்று தேநீர் குடித்துள்ளனர். அப்போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களின் செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் எந்த பகுதிகளுக்கு எல்லாம் சென்றுள்ளனர் என்று கண்டுபிடித்து, அந்த சமயத்தில் வேறு கரோனா நோயாளிகள் யார் யார் இருந்துள்ளனர் என்பதை கண்டறியும் போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்றியது பற்றி காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.
பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 7வது நபரிடம் விசாரித்ததில், அவர் பேருந்து நிலையத்தில் தேநீர் அருந்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த கேபிள் ஆபரேட்டர் மூலமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கும், நண்பர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாக 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டரின் நண்பர் மூலம் 5 மருத்துவர்கள் உட்பட 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

