விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புதன்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மருத்துவர்கள் முடிவு

ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

News image

மது விற்பனை

Updated On :31 மார்ச் 2020, 8:20 am


திருவனந்தபுரம்: ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

மதுவுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால், அவர்களுக்கு மது வழங்குமாறு கேரள மாநில அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமையன்று அனைத்து மருத்துவர்களும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரளத்தில் மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்கும் அரசின் திட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் மதுக்கடைகள், மதுபான பாா்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை செய்துகொண்டனா். இதையடுத்து, மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்கலாம் என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.

மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மது வழங்குவது என்பது அறிவியல்பூா்வமான நடவடிக்கை அல்ல என்று கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த முடிவைக் கண்டித்து புதன்கிழமை கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என் கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இதுபோல யாருக்கும் மது வழங்குமாறு பரிந்துரைக்க முடியாது என்றும் மருத்துவர்கள் சங்கங்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.