/

மதுக்கடைகள் மூடப்பட்டதால் கர்நாடகத்தில் 6 பேர் தற்கொலை

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் கர்நாடகத்தில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:19 pm

UNI


உடுப்பி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் கர்நாடகத்தில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி துணை ஆணையர் ஜி. ஜெகதீஷா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது குடிக்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மனநல ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள் கொண்ட குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

மதுப்பழக்கம் இருப்பவர்கள் யாருக்கேனும் மனநல ஆலோசனை தேவைப்பட்டால் 1077 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

கரோனா பாதித்து உயிரிழந்தவர்களை விட, மதுவுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.