புது தில்லி: இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள்இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள் 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று நம்புவதாகவும், 48% பேருக்கு கரோனா வரக்கூடிய ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 26 - 27ம் தேதிகளில் ஐஏஎன்எஸ் நடத்திய இந்த ஆய்வில், கரோனா பரவல் தொடர்பான அச்சம் இந்தியர்களுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 39% பேர் மட்டுமே, கரோனா நமக்கும் வந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், வெறும் 10 நாள்களில் இந்த சதவீதம் 48% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 17ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின் போது 69% மக்கள், தங்களையோ, தங்கள் குடும்பத்தையோ கரோனா தாக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த நம்பிக்கை தற்போது 12% ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 48 சதவீதம் பேர், தங்களை கரோனா தாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவத் தொடங்கிய போது, பல உலக நாடுகளும், இதே கருத்தைத்தான் கொண்டிருந்தன. தங்களை கரோனா தாக்காது என்று. இந்த எண்ணத்தோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவறவிட்ட அமெரிக்கா, இத்தாலி நாடுகள் தற்போது கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு ஆளாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!

ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


