லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக ஆய்வு செய்தார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 987 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக செய்தார்.
இதுதொடர்பாக் ஞாயிறன்று லக்னௌ நகரத்தில் உள்ள மோகன் சாலை சுங்கச் சாவடிக்கு சென்ற அவர் அங்கிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். அத்துடன் அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
பிறகு அங்கிருந்து அவத் மருத்துவமான சென்ற அவர் அங்கு பொது மக்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்தார்.
வெளியூர்களில் இருந்து மாநிலம் திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு, அவர் முன்னரே தில்லிக்கு அருகில் உள்ள நொய்டா. பகுதிக்கு மாநில அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே மாநிலத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்படாத அளவிற்கு அவர் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!

ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


