மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தனிமைப்படுத்தப்படுவோரின் உடலில் முத்திரை குத்தும் மகாராஷ்டிர அரசு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் அல்லது கரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

News image
Updated On :17 மார்ச் 2020, 11:13 am


மும்பை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் அல்லது கரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

தனிமைப்படுத்தப்படுவர்கள், மருத்துவக் கண்காணிப்பையும் மீறி வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களது கையில் முத்திரைக் குத்தும் நடவடிக்கையில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுமக்களுடன் கலந்து விடாமல், அடையாளம் காண எளிதாக, மகாராஷ்டிரத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் இடது கையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற அடையாளத்துடன், அவர் எத்தனை நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற தேதியும் முத்திரையாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் தற்போது 39 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாகவும் மகாராஷ்டிரம் உள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பில் இருந்த 7 பேர் கடந்த இரண்டு நாட்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றம் விமான நிலையங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களின் கையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும், எத்தனை நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டியவர்கள் என்ற தேதியையும் அழியாத இங்கில் முத்திரையாகக் குத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொதுவிடங்களில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் பொதுமக்களே அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிமையில் இருக்க வேண்டியவர்கள், பொதுவிடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.