புது தில்லி: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 126 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' ரயில்வே நிலையங்களில் தேவைக்கு அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் 250 முக்கிய ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயந்துள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதமே இத்தகைய தருணங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்துவதற்கான அதிகாரத்தை மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு வழங்கியுள்ளோம்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

மாநிலங்களவை: மூன்றில் இரு பங்கு பலம்பெற தே.ஜ. கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் தேவை?

மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


