புது தில்லி: தலைநகர் தில்லியில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
ஜி.டி கர்னல் சாலையில் மதியம் 12 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு ரசாயன தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைத் தலைவர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜஹகிர்புரி மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள தொழிற்சாலைகள். மேலும், இந்த தொழிற்சாலைகள் உள்ள கிடங்கில் சிலிண்டர்கள் மற்றும் பெரிய அளவில் ரசாயனப் பொருட்கள் சேமிப்பு வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாக பரவியது. இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாடி தொழிற்சாலைகளின், தரை தளத்திலிருந்து தீ விபத்து ஏற்பட்டதால், தொழிற்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


