புது தில்லி: வடகிழக்கு தில்லியில் திங்களன்று சிபிஎஸ்இ தேர்வு எழுத வந்த மாணவர்களை காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புது தில்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தில்லி காவல்துறையினர் அளித்துள்ள தகவல்களின்படி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை அங்கு 245 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 41 ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் வன்முறைச் சம்பவங்களின் காரணமாக அங்குள்ள மையங்களில் நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் வடகிழக்கு தில்லியில் திங்களன்று சிபிஎஸ்இ தேர்வு எழுத வந்த மாணவர்களை காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் அமைந்துள்ள சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில்தான், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை திங்களன்று எழுத வந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற நெகிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


