துலே: மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி நகரில் சாவித்ரிபாய் புலே ஆதிவாசி பெண்களுக்கான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் உள்ள குளியலறையில் குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டு விடுதி கண்காணிப்பாளர் சென்று பார்த்தபோது, அங்கிருந்த வாளி ஒன்றில் பிறந்த குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது முதலில் யாரும் முன்வந்து உண்மையைக் கூறவில்லை. பின்னர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை செய்ததில், அவர்தான் அந்த குழந்தையை பெற்றவர் எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது அந்தப் பெண்ணும் குழநதையும் துலே மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தத் தகவல்களை சக்ரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிதாஸ் தாம்னே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


