புது தில்லி: இந்திய மண்ணை விட்டு சீனப்படைகள் எப்போது நீங்கும்? என்று பிரதமருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று விடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் அதில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் உள்ள ஏழைகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழ்வில் கரோனா மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே ஆறு மாதங்களுக்கு என்றாலும் கூட, அவர்களுக்கு நிவாரணம் தரக்கூடிய காங்கிரஸ் பரிந்துரைத்த ‘நியாய்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதன்வழியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.7,500 தொகையினை செலுத்த வேண்டும்.
நமது இந்தியத் திருநாட்டின் நிலப்பரப்பில் நான்கு இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளதை அனைவரும் அறிவார்கள். எனவே இந்திய மண்ணை விட்டு சீனப்படைகள் எப்போது நீங்கும் என்பது குறித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


