புது தில்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
சீனாவுடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
முன்னதாக ஜூன் 6 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் கமாண்டர் மட்டத்திலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்புகளின் முடிவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
சீனப் பகுதியில் நடந்த இந்த இரண்டு சந்திப்புகளும் சுமுகமாக நடந்தன.
இந்நிலையில் செவ்வாயன்று மூன்றாவது தடவையாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இப்பேச்சுவார்த்தையானது லடாக்கின் சுஷுல் பகுதியில்,காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக கடந்த இரு சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிகளை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


