வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

புதுவையில் 287ஐ எட்டியது கரோனா பாதிப்பு: புதிதாக 16 பேருக்குத் தொற்று

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

UNI

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்குப் புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். 37 வயது நபர் ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தொற்று பாதித்து சுமார் 162 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 16 பேரில், 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் இங்குள்ள ஜிப்மரிலும், ஒருவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் இதுவரை 287 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 118 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.