வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 176

புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

UNI

புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் குமார், 

கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில், நான்கு பேர் ஜிப்மரிலிருந்தும், ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்தும், மற்றொருவர் மஹே அரசு மருத்துவமனையிலிருந்து  குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 91 பேர் மருத்துவமனையின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 49 பேரும், ஜிப்மரில் 36 பேரும், மஹே அரசு மருத்துவமனையில் மூன்று பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஒருவரும், சென்னை மற்றும் தில்லியில் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 82 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.