ஆசிரியர்கள், பட்டதாரிகளை கூலித் தொழிலாளர்களாக மாற்றிய பொதுமுடக்கம்
ராமவதார் (35) என்பவர் ஜெய்ப்பூரை அடுத்து ஜோப்நெர் பகுதியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் ஒருவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


ராமவதார் (35) என்பவர் ஜெய்ப்பூரை அடுத்து ஜோப்நெர் பகுதியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் ஒருவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அழுக்கடைந்த ஆடை, ரப்பர் செருப்பு, லுங்கியுடன் காணப்படும் இதர தொழிலாளர்களுக்கு மத்தியில் ராமவதார், நன்கு நேர்த்தியான ஆடை, ஷூ, பெல்ட் அ ணிந்து கொண்டு வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார். அதில் இருந்தே, அவர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களில் ஒருவர் அல்ல என்று நன்கு தெரிகிறது.
இந்தியாவுக்குள் கரோனா எனப்படும் தீநுண்மி பரவி, நாட்டையே பொதுமுடக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு முன்பு வரை, ஜோப்நேரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாகப் பெற்று வந்தவர்தான் இந்த ராமவதார்.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதுமே, பள்ளிகள் மூடப்பட்டதால், ஊதியம் வழங்கப்படாமலேயே, பல ஆசிரியர்களை அந்த தனியார் பள்ளி நீக்கிவிட்டது. அதில் ஒருவர்தான் ராமவதார். கையில் இருந்த சேமிப்புக் கரைந்து போனதும், நூறு நாள் வேலை திட்டத்தில் தனது பெயரை இணைத்துக் கொண்டு தினமும் கூலித் தொழிலாளிகளுடன் சேர்ந்து சுமைத் தூக்கும் வேலையை செய்து வருகிறார்.
இதுபோல வேலை இழந்த பலரும், தங்களது வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்ற நிலையில் இப்படி தினக்கூலிகளாக மாறி வருகிறார்கள்.
இதில் எந்த மாநிலமும், எந்த மாவட்டமும் விதிவிலக்கல்ல. பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கூட பண்ணையில் கூலி வேலை செய்துவருகிறார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் (40) மிகப்பெரிய துணிக் கடையில் மேற்பார்வையாளராக இருந்தார். கடைகள் மூடப்பட்டு, ஊதியம் கிடைக்காததால் கொளுத்தும் வெயிலில் தற்போது தினக்கூலி வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள மிகப்பெரிய உணவகத்தில் மாதம் 20 ஆயிரத்துக்கு சமையல் செய்யும் வேலையை செய்து வந்த சந்தோஷ் குமார் ராய் (30), தனது சொந்த கிராமத்துக்குச் சென்று கூலித் தொழிலாளியாக மாறியுள்ளார்.
கரோனாவின் தாக்கத்தால் நாடு அடைந்த பல துயரங்களில் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதாரப் பின்னடைவும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...