புது தில்லி: நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஒரே நாடு ஒரே சந்தையை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருள்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படும் என்று கூறினார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம், ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


