புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பெங்களூரு விமான நிலையத்தில் மயங்கி விழுந்து விமானப் பயணி உயிரிழப்பு

பெங்களூருவில் உள்ள கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :1 ஜூன் 2020, 11:26 am


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இரண்டு மணி நேரத்தில் விசாகப்பட்டினம் புறப்படும் ஏர் ஏசியா விமானத்தில் செல்ல வேண்டிய நிலையில், கழிவறைக்குச் சென்ற இளைஞர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஊழியர் பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அவர் அரேபள்ளி மாருதி கணேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, நடைமுறைகள் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்த கணேஷ், கழிவறைக்குச் சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக்குப் பிறகே அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனியாக விமான நிலையத்துக்கு வந்ததும், அவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகள் இரண்டு நாள்களுக்குப் பிறகே தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.