புது தில்லி: கரோனா பொதுமுடக்க காலத்தில் சுமார் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர்களை வழங்கியதாக ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உலகையை முடக்கிப்போட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், பலர் சமையலில் தங்களின் கைவண்ணத்தைக் காட்டி அசத்தி வருகின்றனர் என்பது ஒருபக்கம் இருக்க, பொது முடக்கக் காலத்தில் இந்தியர்கள் சுமார் 5.5 லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
உணவு விநியோக தளமான ஸ்விக்கி நிறுவனம், உணவுப் பொருள்கள் மட்டுமல்லாது, பொதுமுடக்க காலத்தில் இதர மளிகைப் பொருள்களையும் விநியோகிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, கிட்டத்தட்ட 323 மில்லியன் கிலோ வெங்காயம் மற்றும் 56 மில்லியன் கிலோ வாழைப்பழங்கள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை ஸ்விக்கி விநியோகம் செய்துள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 65 ஆயிரம் உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1,29,000 சகோ லாவா கேக் மற்றும் கிட்டத்தட்ட 1,20,000 பிறந்தநாள் கேக்குகளை ஆர்டர் மூலம் ஸ்விக்கி நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்று, 73 ஆயிரம் கை சுத்தத் திரவம்(சானிடைசர்) மற்றும் 47 ஆயிரம் முகக் கவசங்களையும் ஆர்டர் மூலம் மக்களுக்கு விநியோகித்துள்ளது.
பொதுமுடக்கக் காலத்தில் 5.5 லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 30 லட்சம் மக்கள் பயணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


