என் தொகுதியில் கரோனா தொற்றே கிடையாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பெருமிதம்
என் தொகுதியில் கரோனா தொற்றே கிடையாது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.


பெங்களூரு: என் தொகுதியில் கரோனா தொற்றே கிடையாது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மாநில சுகாதரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு புதனன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நோய்த்தொற்றில் இருந்து கர்நாடகத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று பேசுகிறார். இந்த அரசின் திறமையின்மையே கடைசியில் மக்களை கடவுளின் கருணையை நோக்கித் தள்ளியுள்ளது.
என்னுடைய கனகபுரா தொகுதியில் புதிய கரோனா தொற்று எதுவும் கிடையாது. கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் அனைவரும் குணப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஊரடங்கு விதிகளை முழுமையாக பின்பற்றி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உதவிய எனது தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருந்தபோதிலும் நாங்கள் தொடர்ந்து விழிப்பாக இருக்கிறோம். தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 30 நோய் எதிர்ப்பு மாத்திரைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகுமாரின் தொகுதியான கனகபுரா தொகுதியானது பெங்களூருவில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தொலைவில் பழைய மைசூர் சாலையிலமைந்துள்ளது. ராமநகரா மாவட்டத்தின் கீழ் வரும் இந்த தொகுதியில் இருந்து சிவகுமார் 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...