நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஓட்டுநருக்கு கரோனா: பெங்களூரு காவல்துறை ஆணையர் தனிமைப்படுத்திக் கொண்டார்

கரோனா பரிசோதனையில் பெங்களூரு காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

News image
ஓட்டுநருக்கு கரோனா: பெங்களூரு காவல்துறை ஆணையர் தனிமைப்படுத்திக் கொண்டார்
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

IANS


பெங்களூரு: தனது வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பரிசோதனையில் பெங்களூரு காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

எனது வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன், பிறகு மீண்டும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ளவிருக்கிறேன் என்று ராவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் ராவ் இதுவரை நான்கு முறை கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார், திங்கள்கிழமை எடுக்கவிருப்பது ஐந்தாவது முறையாகும்.

கரோனா பாதித்தவர்கள் சிலருடன் நான் தொடர்பில் இருந்துள்ளேன். ஆனால், உங்களது வாழ்த்துகளால் இதுவரை எனக்கு கரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை நிலவரப்படி பெங்களூருவில் 2,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.