ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதல் முறையாக நேற்று இரண்டாயிரத்தை கடந்த நிலையில் இன்று 2500-ஐக் கடந்த நிலையில் இன்று 2,600 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,602 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 2,602 பேருக்கு (8 பேர் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டிவிட்டது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 42 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், நேற்று சுமார் இரண்டாயிரத்தை எட்டியது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 40,646 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


