/

ஒடிசாவில் 15 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image

Odisha's COVID-19 positive cases cross 15,000 mark

Updated On :16 ஜூலை 2020, 6:09 am

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 494 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 15,392 ஆக அதிகரித்துள்ளன. இதில் உள்ளூரில் 172 பேரும், 322 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும் பதிவாகியுள்ளது. இதுவரை 10,476 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.