/

சிபிஎஸ்இ தேர்வில் ஒரே மதிப்பெண்களை எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிபிஎஸ்இ +2 தேர்வில் இரட்டைச் சகோதரிகள் அனைத்து பாடங்களிலும்  ஒரே மதிப்பெண்களை எடுத்த அதிசயம் நடந்துள்ளது.

News image

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிபிஎஸ்இ +2 தேர்வில் இரட்டைச் சகோதரிகள் அனைத்து பாடங்களிலும்  ஒரே மதிப்பெண்களை எடுத்த அதிசயம் நடந்துள்ளது.

Updated On :15 ஜூலை 2020, 1:42 pm

ஹத்ராஸ்: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிபிஎஸ்இ +2 தேர்வில் இரட்டைச் சகோதரிகள் அனைத்து பாடங்களிலும்  ஒரே மதிப்பெண்களை எடுத்த அதிசயம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் மானசி மற்றும் மான்யா. இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பவர்கள். சகோதரிகள் இருவரும் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அஸ்டர் பப்ளிக் பள்ளியில் +2 படித்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளில் சகோதரிகள் இருவரும் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களை எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளார்கள்.

ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் 98 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உடற்கல்வியில் 95 மதிப்பெண்கள்,  என ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ள இவர்களின் ஒட்டுமொத்த சராசரி 98.5 ஆகும்.

இதுதொடர்பாக இரட்டையர்களில் ஒருவரான மானசி கூறியதாவது:

நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்தோம். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்போம் என்று நம்பினோம். ஆனால் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவோம் என்று நம்பவில்லை. மான்யா என்னை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறுவாள் என்றுதான் நான் நினைத்தேன். எப்போதும் நாங்கள் ஒரே மாதிரி இருப்பதைக் குறித்து பேசியவர்கள், இனி எங்களது ஒரே மாதிரியான மதிப்பெண்கள் குறித்தும் பேசுவார்கள்.

இதே கருத்தையே கூறிய மான்யா, பள்ளித் தேர்வுகளில் கூட அவர்கள்  ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றதில்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.