காந்தி நகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘பான்’ கடைகளுக்கு அருகே எச்சில் துப்பப்பட்டிருந்தால் கடைக்காரர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டமானது, மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், அகமதாபாத் நகர கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராஜீவ் குமார் குப்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் முகேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் முகக்கவசம் அணியாமல் இருத்தல் ஆகியவற்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையான ரூ.200-ஐ ரூ.500 ஆக உயர்த்துவது என்றும், அகமதாபாத்தில் ‘பான்’ கடைகளுக்கு அருகே எச்சில் துப்பப்பட்டிருந்தால் கடைக்காரர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை எடுத்துக் கூறியும் மக்கள் தொடர்ந்து இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதாலேயே இந்த முடிவு என்றும் அவர் விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


