பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருநங்கைகளும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பு: ஒடிஸா அரசு முடிவு

சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது. 

News image

சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

Updated On :3 ஜூலை 2020, 11:07 am

புவனேஸ்வர்:  சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிஸா அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துறை அமைச்சர் அசோக் சந்திர பாண்டா. அவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் ‘மது பாபு பென்ஷன் யோஜனா’  ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

எனவே அவர்கள் இதற்காக உள்ள இணையதளம் வழியாகவோ அல்லது விண்ணப்பப் படிவங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் சுமார் 6,000 திருநங்கைகள் பயன்பெறுவார்கள்.

திருநங்கைகளுக்கு அவர்களது வயதினைப் பொறுத்து ரூபாய் 500 முதல் 900 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதனை வாக்குறுதியாக அளித்திருந்தது. தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.