பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை!

ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

News image

ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Updated On :2 ஜூலை 2020, 11:00 am

அகர்தலா: ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து திரிபுராவின் செபஹிஜலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்னேந்து சக்ரபோர்த்தி செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மேற்கு திரிபுராவின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள மதுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் பவுமிக் (45). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழநதைகள் உள்ளனர். தினக்கூலி வேலை செய்து வந்த அவருக்கு, தற்போது கரோனா காரணமாக வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. கிடைக்கின்ற சொற்ப பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் 15 வயதான அவரது மூத்த மகள் பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக தனக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சுகுமார் விலை குறைவான சாதாரண போன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். ஆனால் அவரது மகள் அதனை ஏற்க மறுத்துள்ளார். அத்துடன் அவரது மனைவியும் மகளும் சேர்ந்து அவரை கடுமையாகத் திட்டியுள்ளனர். உச்சகட்டமாக அவரது மகள் அவர் வாங்கி வந்த போனை தரையில் அடித்து உடைத்துள்ளார்.

இப்படியான தொடர் அவமானங்களினால் மனமுடைந்த சுகுமார் தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் வியாழனன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.